பவானிசாகர் அருகே தீயில் எரிந்த மாட்டு கொட்டகை

சத்தியமங்கலம், செப்.5: பவானிசாகர் அருகே மாட்டு கொட்டகை தீப்பிடித்து எரிந்து சேதமான நிலையில் அதிர்ஷ்டவசமாக பசுமாடு உயிர் தப்பியது. ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே உள்ள வெள்ளாளபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி குமார்(43). இவர் தனது விவசாய தோட்டத்தில் மாட்டு கொட்டகை அமைத்து பசுமாடுகளை பராமரித்து வந்தார். மேலும் மாட்டு கொட்டகையில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் பவர் டில்லர் இயந்திரம், பிவிசி பைப்புகள், மின்சார கேபிள் மற்றும் தோட்டத்தில் இருந்த வீட்டு சாமான்களை வைத்திருந்தார். நேற்று மதியம் திடீரென மாட்டு கொட்டகை தீப்பிடித்து எரிந்தது.

மாட்டு கொட்டகையில் புகை மூட்டத்துடன் தீப்பிடித்து எரிவதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அருகில் சென்று தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சித்தனர். அப்போது மாட்டு கொட்டையில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு பசு மாடு தீ விபத்தில் சிக்கி தவித்தது. அதிர்ஷ்டவசமாக பசு மாடு கயிற்றை அவிழ்த்து கொண்டு மாட்டு கொட்டையில் இருந்து வெளியே ஓடி உயிர் தப்பியது. இதில், பசு மாட்டின் தோல் பகுதியில் லேசான தீக்காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சத்தியமங்கலம் தீயணைப்பு துறை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

இருப்பினும் மாட்டு கொட்டகையில் இருந்த பவர் டில்லர் இயந்திரம், பிவிசி பைப்புகள் மின்சார கேபிள் மற்றும் ஒரு பீரோ உட்பட வீட்டு சாமான்கள் எரிந்து சேதம் அடைந்தது. தீ விபத்து குறித்து பவானிசாகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாட்டு கொட்டகையில் சூலூரை சேர்ந்த ஆடு மேய்ப்பவர்கள் தங்கி இருந்ததாகவும், அவர்கள் காலையில் சமையல் செய்துவிட்டு அடுப்பில் இருந்தது அணைக்காமல் சென்று விட்டதால் தீ பரவி தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

The post பவானிசாகர் அருகே தீயில் எரிந்த மாட்டு கொட்டகை appeared first on Dinakaran.

Related Stories: