The post மக்களின் சிரமத்தை ரசிக்கும் மோடி அரசு: சீமான் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.
பொள்ளாச்சி: மக்களின் சிரமத்தை மோடி அரசு ரசிக்கிறது என சீமான் குற்றம் சாட்டினார். பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அளித்த பேட்டி: ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது அவசியம் இல்லாத ஒன்று. அந்த தேர்தல் சாத்தியமும் கிடையாது. சூரியனுக்கு விண்கலம் அனுப்புவது வீண் செலவாகும். நேர்மையான நிர்வாகம் இருந்தால் ஊழலை ஒழிக்கலாம். மனித பிறப்பில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் கிடையாது. முந்தைய காலத்தைவிட, இப்போதைய அறிவியல் வளர்ச்சி சாதியை கொன்று விடுகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். தமிழ்நாட்டில் பிரதமர் மோடி போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் அல்லது எதிர்த்து போட்டியிடும் வலுவான கட்சிக்கு ஆதரவளித்து மோடியை தோற்கடிக்க ஆதரவளிப்பேன். மத்தியில் மீண்டும் பாஜ வரக்கூடாது என அனைவரும் நினைக்கின்றனர். தேர்தல் வரும்போது மட்டும் காஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. இவ்வளவு நாளும் மக்களின் சிரமத்தை மோடி அரசு ரசித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
The post மக்களின் சிரமத்தை ரசிக்கும் மோடி அரசு: சீமான் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.