ஒரேநாளில் விதிமீறிய 102 பேர் மீது வழக்கு: 5 பைக்குகள் பறிமுதல்

குடியாத்தம், செப்.4: குடியாத்தத்தில் ஒரேநாளில் விதிமீறிய 102 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 5 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. குடியாத்தம் டவுன் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து நேற்று குடியாத்தம் 4 முனை சந்தித்து, அம்பேத்கர் சிலை, பெரியார் சிலை உள்ளிட்ட பகுதிகளில் இன்ஸ்பெக்டர்கள் பார்த்தசாரதி, முகேஷ்குமார் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது லைசன்ஸ் இல்லாமல் வாகனஓட்டிகள், சாலை விதிமீறல், குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்கள், அதிவேகம் உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறிய வாகனஓட்டிகள் 102 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும், ₹500ல் இருந்து ₹2 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது. இதில், உரிய ஆவணம் இல்லாத 5 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், நேதாஜி சிலை சந்திப்பில் போக்குவரத்து போலீசார் சாலை விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதில், ஹெல்மெட் அணிந்து வந்த வாகனஓட்டிகளுக்கு போலீசார் கைகுலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘18 வயது நிரம்பாத சிறுவர்களிடம் பைக் கொடுத்து அனுப்பினால் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று எச்சரித்தனர்.

The post ஒரேநாளில் விதிமீறிய 102 பேர் மீது வழக்கு: 5 பைக்குகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: