புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை

திருவள்ளூர், செப். 2: தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் அருணன் கோரிக்கை மனு கொடுத்தார். அதன் விவரம் வருமாறு: அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் நீண்ட நாள் எதிர்கால வாழ்வாழ்வாதாரா கோரிக்கையான புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பகுதிநேர சிப்பாசிகள் 12 ஆயிரம் பேரை காலமுறை ஊதியத்தில் கொண்டுவரவேண்டும். இடைநிலை நிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதியம் வழங்குதல், விளையாட்டுத் துறையில் அவுட்ஷோர்சிங் முறையில் பணியாற்றிவரும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்தல், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களை காலமுறை ஊதியத்தில் கொண்டு வரவேண்டும், மருத்துவத்துறையில் பணியாற்றும் பன்நோக்கு பணியாளர்களை காலமுறை ஊதியத்தில் கொண்டுவரவேண்டும், ஊர்புற நூலகர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மேலும், கிராம உதவியாளர்கள், ஊராட்சி எழுத்தர்களை சிறப்பு காலமுறை ஊதியத்தில் கொண்டு வரவேண்டும், ஊராட்சி குடிநீர் ஏற்றுபவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் காலி பணியிடங்களை நிரப்பவேண்டும். ஆகிய கோரிக்கைகளை மனுவில் குறிப்பிட்டுள்ளதாக அருணன் கூறினார்.

The post புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: