நீலகிரியில் 7 நாள் உண்ணாவிரதத்தை தொடங்கிய தேயிலை தோட்ட விவசாயிகள்: 5 அம்ச கோரிக்கைகளை ஒன்றிய அரசு நிறைவேற்ற வலியுறுத்தல்

நீலகிரி: நீலகிரியில் பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி தேயிலை தோட்ட விவசாயிகள் பணியை புறக்கணித்து உண்ணாவிரத போராட்டத்தில் தொடங்கி இருக்கிறார்கள். நீலகிரியை சுமார் 2 லட்சம் ஏக்கர் நிலத்தில் விவசாயிகள் தேயிலை சாகுபடி செய்தனர். இங்கு விளைவிக்கப்படும் பசும் தேயிலைக்கு கடந்த 20 ஆண்டுகளாக உரிய விலை கிடைக்காததால் சுமார் 80 ஆயிரம் விவசாயிகள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மேலும், பசுந்தேயிலைக்கு உரிய விலை வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றம் தேயிலை வாரியத்திற்கு உத்தரவிட்டும் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை.

பசுந்தேயிலை தொடர்பாக சாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரையினையும் ஒன்றிய அரசு கண்டுகொள்ள வில்லை. இதனிடையே அண்மையில் ஒரு கிலோ பசுந்தேயிலை ரூ.14 என விலை நிர்ணயம் செய்து தேயிலை வாரியம் அறிவித்தது. இதனால் நஷ்டத்தில் உள்ள விவசாயிகள் தேயிலை பறிக்கும் தொழிலை தற்காலிகமாக கைவிட்டு 7 நாட்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர். உதகை, நஞ்சுநாடு, மஞ்சூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதி தேயிலை விவசாயிகளும் ஒன்றிய அரசு உடனடியாக 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த போராட்டத்திற்கு விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளூர் வியாபாரிகளும் கடைகளை அடைத்தனர்.

The post நீலகிரியில் 7 நாள் உண்ணாவிரதத்தை தொடங்கிய தேயிலை தோட்ட விவசாயிகள்: 5 அம்ச கோரிக்கைகளை ஒன்றிய அரசு நிறைவேற்ற வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: