ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய சிறப்புக் குழுவை அமைத்தது ஒன்றிய அரசு..!!

டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழுவை ஒன்றிய அரசு அமைத்துள்ளது. குழு உறுப்பினர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு தேர்தல் நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. ஒரே நேரத்தில் சட்டமன்றம் மற்றும் மக்களவைக்கு தேர்தல் நடத்துவது சாத்தியமா? என சிறப்புக்குழு ஆய்வு செய்யும்.

சிறப்பு குழு அளிக்கும் அறிக்கை அடிப்படையில் ஒன்றிய அரசு ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து முடிவெடுக்கும். செப்டம்பர் 18 – செப்டம்பர் 22ம் தேதி வரை நடைபெறவுள்ள சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் 5 அமர்வுகள் இடம்பெறும். செப்டம்பர் 18-ல் தொடங்க உள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் மசோதா நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. மும்பையில் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் குழு அமைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டமும் நடைபெற உள்ளதால் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

The post ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய சிறப்புக் குழுவை அமைத்தது ஒன்றிய அரசு..!! appeared first on Dinakaran.

Related Stories: