சிறுதானியம் உற்பத்தியை அதிகரிக்க வேளாண்மைத்துறை வேன் பிரசாரம்

பள்ளிபாளையம், ஆக.30: சிறுதானி பயிர்களான வரகு, தினை, சாமை, குதிரைவாலி, கம்பு, சோளம், ராகி ஆகியவற்றின் பயன்பாடுகள் குறைந்து அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுகளின் பயன்பாடுகள் மக்களிடையே அதிகரித்துள்ளது. இதனால் கிராமப்புறங்களில் ராகி, கம்பு, தினை, சாமை, குதிரைவாலி உள்ளிட்ட சிறுதானியங்களின் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. தமிழர்களின் பாரம்பரிய உணவு பழக்கங்களும், முறைகளும் மாறி வருவதால் நிரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் அதிகரித்துள்ளத. மனித உடலுக்கு நன்மை பயக்கும் சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்கவும், சிறுதானிய உணவுகளின் அவசியத்தை வலியுறுத்தியும், பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி பள்ளிபாளையம் வட்டாரத்தில் கடந்த காலங்களில் 2,800 ஹெக்டேராக இருந்த சிறுதானிய உற்பத்தி பரப்பளவை, இந்தாண்டு 3 ஆயிரம் ஹெக்டேராக அதிகரிக்க வேளாண்மை துறை திட்டமிட்டுள்ளது.

சிறுதானிய பயன்பாட்டை பெருக்கும் வகையில், கிராமப்புற மக்களிடையே கம்பு, சோளம், வரகு, தினை, சாமை உள்ளிட்டவைகளின் சிறப்புகள், உடலுக்கு கிடைக்கும் நன்மைகளை விளக்கி பள்ளிபாளையம் வட்டாரத்தில் உள்ள 17 கிராமங்களிலும் வேளாண்மைத்துறை வேன் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. சிறுதானியங்களில் உள்ள ஊட்டச்சத்துக்களை அறிந்து கொள்ளும் வகையில், வாகனத்தில் பதாகைகள் பொறுத்தப்பட்டுள்ளது. சிறுதானிய விதைகள், நுண்ணூட்டங்கள், பயிர்பாதுகாப்பு மருந்துகள், அரசு வழங்கும் மானியங்கள் உள்ளிட்ட விபரங்களும் ஒலிப்பதிவு செய்யப்பட்டு, மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் ஒலிபரப்பு செய்யப்படுகிறது.
இந்த விழிப்புணர்வு வாகன பிரசார பயண துவக்க விழா, வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயமணி தலைமையில் நேற்று நடைபெற்றது. பிரசார பயணத்தை அட்மா குழு தலைவர் யுவராஜ் துவக்கி வைத்தார். விவசாயிகள் ஆலோசனை குழு உறுப்பினர் இளங்கோவன், வேளாண்மை அலுவலர் ரஞ்சித்ராஜ், உதவி வேளாண்மை அலுவலர் மாயாஜோதி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

The post சிறுதானியம் உற்பத்தியை அதிகரிக்க வேளாண்மைத்துறை வேன் பிரசாரம் appeared first on Dinakaran.

Related Stories: