இந்த பட்டியலில் 3-வது இடத்தில் உள்ள இத்தாலி 2,452 டன் தங்கத்தை கஜானாவில் வைத்துள்ளது. ஐரோப்பிய நாடான பிரான்ஸ் பட்டியலில் 4-வது இடத்தை பிடித்துள்ளது. பிரான்ஸிடம் 2,437 டன் தங்கம் கையிருப்பில் இருக்கிறது. மதிப்புமிகு மஞ்சள் உலோகம் இருப்பின் அடிப்படையில் ரஷ்யா 5-வது இடத்தில் உள்ளது. அந்நாட்டிடம் 2,326 டன் தங்கம் உள்ளது. 6 இடத்தை 2,068 டன் தங்க சேமிப்புடன் சீனா தன்வசமாக்கி இருக்கிறது. 1,040 டன் உடன் சுவிட்சர்லாந்து 7-வது இடத்திலும், 8-ம் இடத்தில் ஜப்பான் 846 டன் தங்கத்துடனும் உள்ளன. கடந்த மார்ச் மாத தகவலின் படி இந்தியாவிடம் 795 டன் தங்கம் கையிருப்பில் இருக்கிறது. இதனால் அதிகம் தங்கம் வைத்துள்ள நாடுகளின் பட்டியலில் 9-வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. 10-வது இடத்தில் நெதர்லாந்து உள்ளது. அந்நாட்டிடம் 612 டன் அளவு தங்கம் கையிருப்பில் உள்ளது.
The post முதல் இடத்தில் அமெரிக்கா… 9-வது இடத்தில் இந்தியா: உலகிலேயே அதிக தங்கம் கையிருப்பு வைத்திருக்கும் நாடுகளின் பட்டியல் வெளியீடு appeared first on Dinakaran.
