சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போது தங்கள் உயிரைப் பற்றி கவலைப்படாமல் சிறப்பாக பணியாற்றியவர்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள். இவர்களில் பலர் தங்கள் இன்னுயிரையும் ஈந்தது எந்த காலத்திலும் மறக்க முடியாதது. சுகாதாரத் துறையில் தமிழ்நாடு பல்வேறு மாநிலங்களுக்கு முன்மாதிரியாக செயல்பட்டு வருகிறது. இருந்தபோதும், மக்கள் உயிர் காக்கும் பணியில் ஈடுபடும் மருத்துவர்களின் ஊதியம் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் குறைவாக அளிக்கப்படுகிறது.
மேலும், கொரோனா காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை வேலை அளிக்கப்படவில்லை. இந்த கோரிக்கைகள் தொடர்பாக, அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்தி வருகிறது. அவர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசும், காதாரத்துறையும் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post டாக்டர்களுக்கு ஊதிய உயர்வு: ஜி.கே.வாசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.
