காசுக்காக பண்றேன்னு சொல்லாதீங்க!: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய வேண்டும்.. நடிகை விஜயலட்சுமி கண்ணீர் மல்க பேட்டி..!!

சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய வேண்டும் என்று நடிகை விஜயலட்சுமி கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார். சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சீமான் மீது 2011ல் புகார் அளித்தது போல் தற்போதும் மீண்டும் புதிதாக புகார் அளித்துள்ளேன். என்னை சீமான் திருமணம் செய்தது உண்மைதான்; நான் சீமானின் மனைவி. அவரால் அவமானப்பட்டு இங்கு வந்து நிற்கிறேன்.

காசுக்காகவோ, பணத்திற்காகவோ நான் சீமானுக்கு எதிராக இந்த புகாரை அளிக்கவில்லை. சீமானுக்கு அதிமுக ஆதரவு உள்ளது. திருமணம் செய்து கொள்கிறேன் என்று சீமான் சமரசம் பேசினார். கடந்த அதிமுக ஆட்சியில் சீமானை காப்பாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. என்னை நீதிமன்றம் செல்லவிடாமல் சீமான் தடுத்துவிட்டார். சீமானை கைது செய்ய வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். சீமானை கைது செய்யும் வரை என்னுடைய போராட்டம் தொடரும் என கூறினார்.

நாம் தமிழர் கட்சியை நடத்துவதால் தனது தம்பிகள் தன்னை பார்த்துக்கொள்வதாக சீமான் கூறுகிறார் என்றும் விஜயலட்சுமி கண்ணீர் மல்க தெரிவித்தார். நான் வெளியிட்டுள்ள வீடியோக்களுக்கு சீமானின் பதில் என்ன? என்றும் நடிகை விஜயலட்சுமி கேள்வி எழுப்பினார். தொடர்ந்து வீரலட்சுமி பேசுகையில், நிபந்தனை ஜாமினில் மதுரையில் தங்கியிருந்தபோது விஜயலட்சுமியை சீமான் அங்கு வரவழைத்தார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அழைத்து வந்து விஜயலட்சுமியுடன் சீமான் மாலை மாற்றிக்கொண்டார் என தெரிவித்தார். விஜயலட்சுமியை மனைவியாகவும், கயல்விழியை துணைவியாகவும் வைத்துக்கொள்வதாக சீமான் கூறியதாக விஜயலட்சுமி தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

The post காசுக்காக பண்றேன்னு சொல்லாதீங்க!: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய வேண்டும்.. நடிகை விஜயலட்சுமி கண்ணீர் மல்க பேட்டி..!! appeared first on Dinakaran.

Related Stories: