விண்வெளி ஆய்வு மையத்திற்கு 4 வீரர்களுடன் புறப்பட்டது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்

கேப் கனாவெரல்: சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தின் புதிய குழுவாக 4 நாடுகளைச் சேர்ந்த 4 ஆய்வாளர்களுடன் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் வெற்றிகரமாக நேற்று விண்ணில் பாய்ந்தது.
அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. இங்கு ஆய்வுப் பணிகள் மேற்கொள்ள ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒருமுறை புதிய குழு அனுப்பி வைக்கப்படும். அதன்படி கடைசியாக கடந்த மார்ச் மாதம் சென்றது. அதைத் தொடர்ந்து, புதிய குழுவை விண்வெளிக்கும் அனுப்பும் பணி நேற்று நடந்தது. சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு வீரர்களை அனுப்பும் பணியை நாசா உடன் இணைந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி ஆய்வு மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் பால்கன் 9 ராக்கெட் நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதில் அமெரிக்கா, டென்மார்க், ஜப்பான், ரஷ்யா ஆகிய 4 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் சென்றுள்ளனர். விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்லும் 4 வீரர்கள் வெவ்வேறு நாட்டவர்கள் என்பது இதுவே முதல் முறை. இதற்கு முன் நாசா சார்பில் குறைந்தபட்சம் 2 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த ராக்கெட் 30 மணி நேர பயணத்துடன் இன்று சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்றடையும்.

The post விண்வெளி ஆய்வு மையத்திற்கு 4 வீரர்களுடன் புறப்பட்டது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் appeared first on Dinakaran.

Related Stories: