மனைவி ஏமாற்றியதாக கூறி வீடியோ பதிவு செய்துவிட்டு கான்ட்ராக்டர் தற்கொலை

 

சென்னை, ஆக.26: மதுரவாயல் அடுத்த நூம்பல் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (43), கேட்டரிங் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி நான்சி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கணவன், மனைவியே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 மாதங்களாக நான்சி அவரது ஒரு மகனுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் தனது சாவுக்கு தனது மனைவிதான் காரணம் என கார்த்திக் தனது மகன் மற்றும் உறவினர்களுக்கு உருக்கமான வீடியோ ஒன்று வெளியிட்டு விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது:

எல்லாருக்கும் வணக்கம். எனது மனைவி நான்சி. அவள் பிஎச்டி முடிக்கவில்லை. பணம் கொடுத்து சான்றிதழ் வாங்கியுள்ளார். அவளுக்கு உள்ள கள்ளதொடர்பால் என்னை பிரிந்து சென்று 4 மாதங்கள் ஆன நிலையில், விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அவளுடன் தொடர்பில் உள்ள நபர் யார் என்று தெரியவில்லை. காரை மட்டும் தான் பார்க்க முடிந்தது. இந்த நாய்கள் இப்படி செய்வதால் எங்கள் வீட்டு நாய் வாலாட்டிக்கொண்டு சென்று விட்டது.

என் உயிர் போவது கடைசியாக இருக்கட்டும். நான் உண்மையாக காதலித்ததால் என் உயிரையே மாய்த்துக் கொள்கிறேன். உலகம் திருந்த வேண்டும் என்று நான் உயிரை மாய்த்துக் கொள்கிறேன். என் இறப்புக்குப் பிறகு ஒழுங்காக இரு. அவனோடு சேர்ந்து வாழ அவள் எடுத்த பிளான் இது. 12 வயதிலேயே ஒழுக்கத்தை இழந்தவள். என்னுடைய பணம் எவ்வளவு அழித்திருக்கிறாய். என் உயிர் போக வேண்டும் என நீ உயிரோடு இருந்திருக்கிறாய். எத்தனையோ பேருடன் பழகி விட்டு இறுதியாக என்னிடம் பணம் இருப்பதால் என்னை வளைத்து போட வேண்டும் என என்னுடன் வந்தாள்.

என்னுடன் இருந்து கொண்டு கர்ப்பமாகி விட்டு அதனை கலைக்க முடியாது என நாடகம் ஆடினாள். நான் இறந்து போனால் என் இன்சூரன்ஸ் பணத்தை அவளுக்கு கொடுக்க வேண்டாம். உங்களை யாரையும் பார்க்க விரும்பவில்லை. யாரும் எனது இறப்புக்கு வர வேண்டாம். தற்போது நான்சியுடன் இருக்கும் நபர் ராணுவ வீரர் என போலியாக அரசை ஏமாற்றி வருகிறார். இதுபோன்ற ஆட்களை விடாதீர்கள். இதுபோல் ஏமாற்றியவரையும் அவரது குடும்பத்தையும் கைது செய்ய வேண்டும். இப்படி உருக்கமான வீடியோக்களை வீடியோவாக பதிவு செய்துவிட்டு கார்த்திக் தற்கொலை செய்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ ஆதாரங்களை வைத்து மதுரவாயல் போலீசார் நான்சியிடம் விசாரணை செய்ய முடிவு செய்துள்ளனர்.

The post மனைவி ஏமாற்றியதாக கூறி வீடியோ பதிவு செய்துவிட்டு கான்ட்ராக்டர் தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: