காவிரி நீர் விவகாரத்தில் அனைத்துக்கட்சிகள் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை: காவிரி நீர் விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கர்நாடக அணைகளில் 80 விழுக்காடு நீர் உள்ள நிலையில், செப்டம்பர் மாதம் இறுதி வரை தென்மேற்கு பருவமழை பெய்யும் என்ற நிலையில், அனைத்து அணைகளும் நிரம்பி வழிந்தால்தான் உபரிநீர் தமிழ்நாட்டிற்கு திறந்துவிடப்படும்.

உரிய நீரை திறந்துவிட முடியாது என்ற தொனியில் கர்நாடக முதல்வர் பேசுவது உச்ச நீதிமன்ற அவமதிப்பாகும். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி தமிழ்நாட்டிற்கு உரிய நீரை கர்நாடகம் திறந்துவிட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். பிரதமரை நேரில் சந்தித்து தமிழ்நாட்டின் பக்கம் உள்ள நியாயத்தினை எடுத்துரைக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்திலும் வலுவான வாதங்களை தமிழ்நாட்டின் சார்பில் எடுத்துரைக்க வேண்டும் என முதல்வரை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post காவிரி நீர் விவகாரத்தில் அனைத்துக்கட்சிகள் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: