இந்த மாநாட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு “புரட்சித் தமிழர்” என்ற பட்டம் வழங்கப்பட்டது. புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமியும் அதிமுகவை கட்டிக் காப்பாற்றுவார் என்று கூறி, “புரட்சித் தமிழர்” பட்டம் மேடையில் வழங்கப்பட்ட நிலையில் தொண்டர்கள் உற்சாகமாக கைதட்டினர்.
இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், எல்லோரும் தங்கள் பெயருக்கு முன் புரட்சியை சேர்ப்பதால் புரட்சிக்கு வறட்சி ஏற்பட்டுள்ளது. நடிகர் சத்யராஜ் மட்டுமே புரட்சித் தமிழன் பட்டத்திற்கு உரியவர்; அதிமுகவின் மதுரை மாநாடு அரசியலில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றார்.
The post எல்லோரும் தங்கள் பெயருக்கு முன் புரட்சியை சேர்ப்பதால் புரட்சிக்கு வறட்சி ஏற்பட்டுள்ளது: சீமான் விமர்சனம் appeared first on Dinakaran.
