புதுவை துணை சபாநாயகர் சென்னையில் ‘அட்மிட்’

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜவேலு (64). புதுச்சேரி சட்டசபை துணை சபாநாயகர். நேற்று முன்தினம் அரசு விழாக்களில் கலந்து கொண்டார். நேற்று காலை வீட்டில் திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது. உடனே மனைவி மாலதி மற்றும் குடும்பத்தினர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

பின்னர் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் நலம் விசாரித்தனர்.

The post புதுவை துணை சபாநாயகர் சென்னையில் ‘அட்மிட்’ appeared first on Dinakaran.

Related Stories: