சிங்கப்பூர் அதிபர் தேர்தல் இந்திய வம்சாவளி தருமன் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிப்பு

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் அதிபராக இருக்கும் ஹலிமா யாக்கோபின் 6 ஆண்டு கால பதவி காலம் செப்டம்பர் 13ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, அங்கு செப்டம்பர் 1ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த தருமன் சண்முகரத்தினம் கடந்த 3 ஆண்டுகளாக வகித்து வந்த அமைச்சர் பதவி மற்றும் பொதுவாழ்வு பதவிகளை துறந்தார். தருமன், எங் கோக் சாங், டான் கின் லியான் ஆகியோர் அதிபர் தேர்தலில் போட்டியிட தகுதி உடையவர்களாக தேர்வாகி இருந்தனர்.

இந்நிலையில், தருமன் சண்முகரத்தினம் உள்ளிட்ட 3 பேரையும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக சிங்கப்பூர் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இவர்கள் மூன்று பேரும் அதிகாரப்பூர்வமாக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளதால், போட்டியில் இருந்து விலகினால், அவர்கள் செலுத்திய தலா ரூ.24.80 லட்சம் தேர்தல் டெபாசிட்டை இழக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post சிங்கப்பூர் அதிபர் தேர்தல் இந்திய வம்சாவளி தருமன் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: