அதிபர் கிம் மேற்பார்வையில் கப்பலில் இருந்து வட கொரியா ஏவுகணை சோதனை: படையெடுப்பு ஒத்திகையா?

சியோல்: வடகொரியாவில் கப்பலில் இருந்து நடத்தப்பட்ட ஏவுகணை சோதனையை அதிபர் கிம் ஜோங் உன் பார்வையிட்டார். வட கொரியாவின் அணுசக்தி மிரட்டலை எதிர்கொள்ள தென் கொரியாவுக்கு உதவும் வகையில், அமெரிக்கா அந்நாட்டுடன் சேர்ந்து அவ்வபோது கூட்டு ராணுவம், கடற்படை ஒத்திகை மற்றும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா அவ்வபோது ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

இந்நிலையில், ஆயுதங்கள், வெடிகுண்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை கடந்த வாரம் ஆய்வு செய்த அதிபர் கிம் ஏவுகணை தயாரிப்பை தீவிரப்படுத்த உத்தரவிட்டிருந்தார். இதனிடையே, அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளின் முதல் தனித்த முத்தரப்பு உச்சி மாநாடு 4 நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்தது. இதில், வடகொரியாவின் அணு ஆயுதம், ஏவுகணைகளை எதிர்கொள்ள கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை உள்ளிட்டவற்றில் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த 3 நாடுகளும் ஒப்புக் கொண்டன.

மேலும், அமெரிக்கா-தென் கொரியாவும் கூட்டு ராணுவ பயிற்சிகளில் ஈடுபட இருப்பதாக அறிவித்தன. வடகொரியா இதனை படையெடுப்பு ஒத்திகையாக கருதுவதால், தென்கொரியாவை அச்சுறுத்த நேற்று மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி உள்ளது. இந்த சோதனை சிறிய ரக போர் கப்பல்களை ஆய்வு செய்ய சென்ற வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் நேரடி மேற்பார்வையின் கீழ் நடந்ததாக அந்நாட்டின் அதிகாரபூர்வ ஊடகமான கேசிஎன்ஏ. படங்களை வெளியிட்டுள்ளது.

The post அதிபர் கிம் மேற்பார்வையில் கப்பலில் இருந்து வட கொரியா ஏவுகணை சோதனை: படையெடுப்பு ஒத்திகையா? appeared first on Dinakaran.

Related Stories: