அவைத்தலைவர் தேர்வுக்கு கூட்டப்படும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி வழக்கு: ஓபிஎஸ், இபிஎஸ்.சுக்கு சிவில் கோர்ட் நோட்டீஸ்

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரிய வழக்கில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பதிலளிக்குமாறு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள ஆவிளிபட்டியைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் சூரியமூர்த்தி தாக்கல் செய்துள்ள மனுவில், அதிமுக பொதுச்செயலராக இருந்த ஜெயலலிதா இறந்த பிறகு சசிகலா இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்ற நிலையில் பொதுக்குழுவை கூட்டி பொதுச்செயலாளர் பதவியை நீக்கி விட்டு கட்சியின் சட்ட விதிகளுக்கு முரணாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை உருவாக்கினர். கட்சியின் அவைத் தலைவராக பதவி வகித்து வந்த மதுசூதனன் சமீபத்தில் காலமானார். இந்த பதவிக்கு வேறு நபரை தேர்வு செய்ய ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் கட்சியின் பொதுக்குழுவை கூட்ட உள்ளனர். கட்சியின் சட்ட விதிமுறைப்படி பொதுச் செயலாளர் பதவிக்கான் தேர்தலை நடத்தி புதிய பொதுச்செயலாளர் பொறுப்பேற்ற பின்பு பொதுக்குழுவை கூட்டி உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டும். அதன் பிறகு தேர்வு செய்யப்படும் பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் அவைத்தலைவரை தேர்வு செய்ய வேண்டும். எனவே, விதிமுறைகளுக்கு முரணாக அதிமுக கட்சியின் அவைத்தலைவரை நியமனம் செய்யவோ தேர்வு செய்யவோ தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.இந்த மனு நீதிபதி தாமோதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும்  எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை வரும் 23ம் தேதிக்கு தள்ளி வைத்தார்….

The post அவைத்தலைவர் தேர்வுக்கு கூட்டப்படும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி வழக்கு: ஓபிஎஸ், இபிஎஸ்.சுக்கு சிவில் கோர்ட் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Related Stories: