சென்னை பல்லாவரம் அருகே ஏரிகளில் தொடர்ந்து நீர் திருட்டு: மாவட்ட ஆட்சியர் நேரடியாக தலையிட மக்கள் வலியுறுத்தல்

சென்னை: சென்னை பல்லாவரம் அருகே ஏரிகளில் நூற்றுக்கணக்கான டேங்கர் லாரிகளில் இரவு பகலாக தண்ணீர் திருடப்பட்டு வருகிறது. நிலத்தடி நீரை திருடுவோர் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. சென்னை பல்லாவரம், துரைப்பாக்கம், ரேடில்ஸ் சாலை, கீழ்கட்டளை ஏரிகளில் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் திருட்டு வெளிப்படையாக நடைபெற்று வருகிறது.

இதனால் கீழ்கட்டளை ஏரி நன்மங்கலம் ஏரியை சுற்றியுள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிந்து வருவதாக கூறப்படுகிறது.ஏரிகளில் உறிஞ்சப்படும் நீர் விவசாய கிணறுகளிலிருந்து உறிஞ்சப்படும் நிலத்தடி நீர் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள ஐடி நிறுவனங்கள், நட்சத்திர விடுதிகளுக்கு கொள்ளை லாபத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.

இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏரிகளில் இருந்து மற்றும் கிணறுகளிலிருந்து நிலத்தடி நீர் திருட்டை தடுக்க அதிகாரம் உள்ள பல்லாவரம் வட்டாட்சி அலுவலகம் அருகிலேயே இருந்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குற்றச்சாட்டாகும். டேங்கர் லாரிகளை போலீசாரும் கண்டு கொள்வதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த விஷயத்தில் மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தலையிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சென்னை பல்லாவரம் அருகே ஏரிகளில் தொடர்ந்து நீர் திருட்டு: மாவட்ட ஆட்சியர் நேரடியாக தலையிட மக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: