துணை வேந்தரின் சம்பளம் நிறுத்தி வைப்பு பீகார் முதல்வர்-கவர்னர் இடையே மோதல்

பாட்னா: துணை வேந்தர் சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டது தொடர்பாக முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் ஆளுநர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பீகாரின் முசாபர்பூரில் பாபாசாகிப் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைகழகம் உள்ளது. இதில் துணை வேந்தராக சைலேந்திர சதுர்வேதியும்,இணை வேந்தராகவும் இணை வேந்தராக ரவீந்தரகுமாரும் பதவி வகிக்கின்றனர். குறித்த நேரத்தில் பல்கலைக்கழக தேர்வுகள் நடத்துவது மற்றும் இதர பிரச்னைகள் பற்றி விவாதிப்பதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன் ஆய்வு கூட்டத்தை கூடுதல் தலைமை செயலாளர் கூட்டியிருந்தார்.

இந்த கூட்டத்தில் துணை வேந்தர், இணை வேந்தர் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து பல்கலை கழகத்தின் துணை வேந்தர், இணை வேந்தரின் வங்கி கணக்கை முடக்குவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர் தலையிட்டு துணை வேந்தர்,இணை வேந்தரின் சம்பளங்களை நிறுத்தும் உத்தரவை திரும்ப பெறுவதற்கு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக முதல்வர் மற்றும் ஆளுநர் அலுவலகத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

The post துணை வேந்தரின் சம்பளம் நிறுத்தி வைப்பு பீகார் முதல்வர்-கவர்னர் இடையே மோதல் appeared first on Dinakaran.

Related Stories: