அதேபோல வஃப் வாரிய தலைமை செயல் அலுவலர் ஜெய்னுலாப்தீன் அதே பணியிலேயே தொடர்வார். மாவட்ட வருவாய் அலுவலர்கள் பணியிடமாறுதல்கள் பின்வருமாறு: ஈரோடு, ஆவின் பொது மேலாளர் செல்வி. பேபி நாகப்பட்டினம் மாவட்ட அலுவலராகவும், சென்னை மாநகராட்சி மண்டல மேலாளர்-10 பால் பிரின்சிலி ராஜ்குமார் தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலராகவும், மதுரை, நெடுஞ்சாலைத்துறை தனி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலராக இடமாற்றம் செய்யப்படுகின்றனர். அதேபோல, திருநெல்வேலி தாமிரபணி – கருமேனியார்- நம்பியார் ஆற்று இணைப்பு திட்டத்தின் தனி மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலராகவும், திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு இயக்குநரகத்தின் சமூக வலைதள இணை இயக்குனராகவும், சேலம் ஆவின் பொது மேலாளர் விஜய்பாபு ஒழுங்கு நடவடிக்கை ஆணைராகவும் (சென்னை) , நாகர்கோயில் ஒழுங்கு நடவடிக்கை ஆணையராக மங்களம் திருச்சி மாவட்ட வருவாய் அலுவலராகவும் இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.
இதேபோல, கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கோவை ஒழுங்கு நடவடிக்கை ஆணையராகவும், திருநெல்வேலி ஒழுங்கு நடவடிக்கை ஆணையர் அனிதா, கோவை விமான நிலைய விரிவாக்கம் தனி மாவட்ட வருவாய் அலுவலராகவும், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகத்தின் துணை ஆணையர் ஆனந்தி, மதுரை நெடுஞ்சாலைத்துறை தனி மாவட்ட வருவாய் அலுவலராகவும், சென்னை ஆவின் பொது மேலாளர் பொற்கொடி, மாற்றுத்திறனாளிகளுக்கான நல ஆணையரகத்தின் இணை இயக்குநராகவும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தின் பொது மேலாளர் பாரதி தேவி தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பின் நிர்வாக இயக்குநராகவும் இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.
The post மாவட்ட வருவாய் அதிகாரிகள் 12 பேர் இடமாற்றம் appeared first on Dinakaran.
