பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூரில் சுகாதார செவிலியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

அரியலூர், ஆக.19:அரியலூர் அண்ணாசிலை அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் நலச் சங்கம், தமிழ்நாடு அரசு கிராம பகுதி, சமுதாய சுகாதார செவிலியர்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், கிராம, பகுதி, சமுதாய சுகாதார செவிலியர்களுக்கு கூடுதலாக கணினி பதிவேற்றாளர் பணியை வழங்கக் கூடாது. அனைத்து தரப்பு மக்களுக்கும் தரமான சுகாதார சேவை உடனடியாக கிடைத்திட கிராம, பகுதி, சமுதாய செவிலியர்களை தாய் சேய் நலம் நல வாழ்வு பணிகளை செய்யவிட வேண்டும். ஒர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தலா ஒரு வீதம் டிஇஓக்களை(மாவட்ட டேட்டா என்டரி அலுவலர்) பணியமர்த்திட வேண்டும்.

திட்டப் பணிகள் தொடங்கும் முன் தொடர்புடைய சங்கங்களை அழைத்து கருத்துக் கேட்க வேண்டும். முதல் குழந்தை கருவுற்ற தாய்மார்களுக்கு இரண்டு தவணைகளில் தலா ரூ.2 ஆயிரத்தை உரிய முறையில் சரியான நேரத்தில் கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும். நியாய விலைக் கடையில் பதிவேற்றம் செய்ய வேண்டிய பணியை கிராம சுகாதார செவிலியர் மீது திணிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் எஸ்தர் ராஜகுமாரி தலைமை வகித்தார். செயலர் பாலாம்பிகை முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாகி கோமதி கோரிக்கைகள் குறித்து விளக்க உரையாற்றினார்.

The post பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூரில் சுகாதார செவிலியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: