சென்னை: பெரியார், அம்பேத்கர் கருத்துகளை பேச்சாலும் செயல்களாலும் வளப்படுத்திடும் திருமாவளவனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.