திமுக முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறனின் 90வது பிறந்தநாள்: அமைச்சர்கள் மரியாதை!

சென்னை: திமுக முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறனின் 90வது பிறந்தநாளையொட்டி அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். சென்னை கோடம்பாக்கம் முரசொலி அலுவலகத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செய்தனர். மறைந்த ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறன் அவர்களின் 90வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இந்த நிகழ்வின் போது முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், பகுதிக் கழகச் செயலாளர்கள், தலைமைச் செயற்குழு – பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பகுதிக் கழக நிர்வாகிகள், வட்டக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகப் பிரதிநிதிகள், வட்டக் கழக நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள், இளைஞர் அணி, மகளிர் அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி ஆகிய அனைத்து அணிகளின் மாநில நிர்வாகிகள், மாவட்ட அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள், கழகத் தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு திமுக தலைமை கழகம் கேட்டுக்கொண்டது.

இந்நிலையில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறனின் 90வது பிறந்தநாளையொட்டி சென்னை கோடம்பாக்கம் முரசொலி அலுவலகத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதை தொடர்ந்து, மதுரை சிலைமான் பகுதியில் உள்ள அண்ணா மன்றத்தில் முரசொலி மாறன் படத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

 

The post திமுக முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறனின் 90வது பிறந்தநாள்: அமைச்சர்கள் மரியாதை! appeared first on Dinakaran.

Related Stories: