புதுடெல்லி: பாதுகாப்புக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவில் ராகுல்காந்தி இடம் பெற்றுள்ளார். இதற்கான அறிவிப்பை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. மோடி பெயர் குறித்த சர்ச்சையில் சூரத் நீதிமன்றம் விதித்த 2 ஆண்டு சிறை தண்டனையால் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் சிறை தண்டனைக்கு தடை விதித்ததால் அவருக்கு மீண்டும் எம்பி பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில் பாதுகாப்புக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவில் ராகுல்காந்தி பெயரை மக்களவை செயலகம் பரிந்துரை செய்துள்ளது. காங்கிரஸ் எம்.பி.அமர் சிங்கும் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளார்.
The post மக்களவை செயலகம் அறிவிப்பு பாதுகாப்புக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவில் ராகுல் காந்தி appeared first on Dinakaran.