மகிந்திரா எக்ஸ்யுவி 300 டபிள்யூ2

மகிந்திரா நிறுவனம் எக்ஸ்யுவி 300 காம்பாக்ட் எஸ்யுவியில் டபிள்யூ4 வேரியண்டை ஏற்கெனவே அறிமுகம் செய்திருந்தது. இந்த வரிசையில் தற்போது டபிள்யூ2 என்ற காரை அறிமுகம் செய்திருக்கிறது. இதில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 110 எச்பி பவரையும் 200 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். டபிள்யூ4 வேரியண்டின் துவக்க ஷோரூம் விலையாக சுமார் ரூ.8.65 லட்சம் எனவும், இதுபோல் துவக்க ஷோரூம் விலையாக டபிள்யூ6 சுமார் ரூ.9.99 லட்சம், டபிள்யூ8 சுமார் ரூ.11.49 லட்சம், டாப் வேரியண்டான 2 டபிள்யூ8 (ஓ) சுமார் ரூ.12.59 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த வரிசையில் அடிப்படை வேரியண்டாக டபிள்யூ2 அறிமுகமாகியுள்ளது. இதுபோல் டபிள்யூ4 -ன் அடிப்படை வேரியண்டாக டர்போ ஸ்போர்ட் அறிமுகமாகியுள்ளது. இதன் ஷோரூம் விலையாக சுமார் ரூ.9.29 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 131 எச்பி பவரையும் 230 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இடம் பெற்றுள்ளது.

The post மகிந்திரா எக்ஸ்யுவி 300 டபிள்யூ2 appeared first on Dinakaran.

Related Stories: