ஏரிகளின் ஆக்கிரமிப்புகளை ட்ரோன் மூலம் கண்காணிப்பு: பொதுப்பணித்துறை அதிகாரிகள் மும்முரம்

திருவள்ளூர்: சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தலின்பேரில் தமிழக பொதுப்பணித்துறையின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம் கொசஸ்தலையாறு வடிநில கோட்ட அலுவலக பராமரிப்பில் உள்ள ஏரிகளின் ஆக்கிரமிப்புகளை ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழக நீர் நிலைகளின் ஆக்கிரமிப்புகளை கண்காணித்து அகற்றுவதற்காகவும், நீர் நிலைகளின் மட்ட அளவுகளை நேரடியாக கட்டுப்பாட்டு அறையினர் கண்காணிக்கவும் 60 மைக்ரோ வகை ட்ரோன் கேமராக்கள் மற்றும் 9 சிறிய வகை கேமராக்களை வாங்குவதற்கு தமிழக அரசு ரூ.8.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நிதி நிலை அறிக்கையில் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளவாறு தமிழக பொதுப்பணித்துறையின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம் கொசஸ்தலையாறு வடிநில கோட்ட அலுவலக பராமரிப்பில் உள்ள ஏரிகளின் ஆக்கிரமிப்புகளை ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும், கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின்பேரில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பொதுப்பணி திலகம், உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் ரமேஷ் ஆகியோர் மேற்பார்வையில் வருவாய் துறையின் உதவியோடு ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்ற பொதுப்பணித் துறை ஊழியர்கள் களம் இறங்கியுள்ளனர். இதன் முன்னோட்டமாக திருவள்ளூர் மாவட்ட கொசஸ்தலையாறு வடிநில கோட்ட பராமரிப்பில் உள்ள பாண்டூர், கைவண்டூர் ஆகிய ஏரிகளில் நீர் பிடிப்பு பகுதிகளில் ஏரியின் உள்வாய் மற்றும் வரவுக் கால்வாய் பகுதிகளை ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டன….

The post ஏரிகளின் ஆக்கிரமிப்புகளை ட்ரோன் மூலம் கண்காணிப்பு: பொதுப்பணித்துறை அதிகாரிகள் மும்முரம் appeared first on Dinakaran.

Related Stories: