லஞ்சம் வாங்கிய வழக்கில் இருந்து மலேசிய முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் விடுவிப்பு

கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் லஞ்ச வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மலேசிய பிரதமராக பெர்சாத்து கட்சியை சேர்ந்த முகைதீன் யாசின் கடந்த 2020 முதல் 2021 வரை பதவி வகித்து வந்தார்.இவர் பெர்சாத்து கட்சிக்காக ரூ400 கோடி லஞ்சம் பெற்றதாக, கொரோனா நிவாரண பணிகளில் முறையான விதிகளை பின்பற்றவில்லை, மலேசியாவின் ஜன விபவா திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஊழல் வழக்கு ஒன்றில் கடந்த மார்ச் 10ம் தேதி ஊழல் தடுப்பு ஆணையம் முகைதீன் யாசினை கைது செய்தது. இந்நிலையில் பெர்சாத்து கட்சிக்காக ரூ400 கோடி லஞ்சம் வாங்கியதாக முகைதீன் யாசின் மீது பதியப்பட்ட 4 குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் முகைதீன் யாசின் கூறும்போது, “நான் எந்த தவறும் செய்யவில்லை. என் மீதான புகார் அரசியல் உள்நோக்கம் கொண்டது. என் மீதான குற்றச்சாட்டு பொய்யானது என்பது தற்போது நிரூபணமாகி உள்ளது” என்று தெரிவித்தார்.

The post லஞ்சம் வாங்கிய வழக்கில் இருந்து மலேசிய முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் விடுவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: