குஜராத் டூ அருணாச்சல் பயணத்திட்டம் தயார்; ‘பாரத மாதா’ என்பது வெறும் நிலம் அல்ல!: 2ம் கட்ட நடைபயணம் குறித்து ராகுல் சூசகம்

புதுடெல்லி: ‘பாரத மாதா’ என்பது வெறும் நிலம் அல்ல என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று வெளியிட்ட பதிவில், ‘கடந்த ஆண்டு கன்னியாகுமரியில் இருந்து ஜம்மு – காஷ்மீர் வரை 145 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டேன். கடல் கரையிலிருந்து ெதாடங்கிய எனது பயணம், வெயில், தூசி, மழை, காடு, நகரங்கள், மலைகள் வழியாக காஷ்மீரின் பனியை அடைந்தேன். பல வருடங்களாக தினமும் 8 கி.மீ தூரம் வரை ஓடுகிறேன்.

அப்படியானால் தினமும் ஏன் 25 கி.மீ தூரம் ஓடக்கூடாது என்று நினைத்தேன்? என்னால் தினமும் 25 கிலோமீட்டர் தூரத்தை எளிதாக கடக்க முடியும் என்று நம்பினேன். அவ்வாறு நடைபயணம் மேற்கொண்ட போது, முழங்கால் வலி ஏற்பட்டது. 3,800 கிலோமீட்டர் பயணத்தை எப்படி முடிப்பேன் என்று நினைத்து தனியாக அழுதேன். இந்த பயணத்தை எப்பொழுது நிறுத்த நினைத்தேனோ, இத்திட்டத்தை கைவிட நினைத்தேனோ, அப்போதுதான் எங்கிருந்தோ ஓடிவரும் ஒருவர் எனக்கு அன்பான பரிசை தருவார்கள்.

ஒருமுறை சிறுமி கடிதம் கொடுத்தார். வயதான பெண் ஒருவர் வாழைப்பழ சிப்ஸ் கொடுத்தார். ஒருவர் ஓடி வந்து என்னைக் கட்டிப்பிடித்தார். ‘பாரத மாதா’ என்பது வெறும் நிலம் அல்ல. குறிப்பிட்ட கலாசாரம், வரலாறு, மதத்துடன் தொடர்புடையது அல்ல. ஒவ்வொரு இந்தியனின் குரலாக இந்தியா உள்ளது. எவ்வளவு பலவீனமாக இருந்தாலும், பலமாக இருந்தாலும் இந்தியா என்பது வலி, மகிழ்ச்சி, பயம் ஆகியவற்றால் அடக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தியின் இரண்டாம் கட்ட இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கான வேலைகள் நடைந்து வரும் நிலையில், இன்று ராகுல் காந்தி வெளியிட்ட பதிவு முக்கியத்துவம் பெறுகிறது. அவர் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட நடைபயணத்தை தொடருவார் என்றும், அந்த பயணத்தை குஜராத்தின் போர்பந்தரிலிருந்து தொடங்கி அருணாச்சல பிரதேசத்தின் லோஹித் மாவட்டத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் காங்கிரஸ் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் கூறிவருகின்றனர்.

The post குஜராத் டூ அருணாச்சல் பயணத்திட்டம் தயார்; ‘பாரத மாதா’ என்பது வெறும் நிலம் அல்ல!: 2ம் கட்ட நடைபயணம் குறித்து ராகுல் சூசகம் appeared first on Dinakaran.

Related Stories: