இன்னுயிரை தியாகம் செய்த வீரர்களுக்கு போர் நினைவிடத்தில் ஜனாதிபதி மரியாதை

புதுடெல்லி: சுதந்திர தினத்தையொட்டி டெல்லி போர் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மரியாதை செலுத்தினார். நாட்டின் சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், டெல்லி செங்கோட்டையில் தொடர்ந்து 10வது முறையாகப் பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றினார்.

அதுபோல நாடு முழுவதும் மாநில முதல்வர்கள் அந்தந்த மாநிலங்களில் தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தினர். யூனியன் பிரதேசங்களிலும் முதல்வர்கள் தேசிய கொடியை ஏற்றினர்.
இந்நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்புகளும் சுதந்திர நாளைக் கொண்டாடினர்.

இந்நிலையில் நாட்டின் சுதந்திரத்திற்காகவும், பாதுகாப்புக்காகவும் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும்விதமாக டெல்லி போர் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை ராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு மரியாதை செய்தனர்.

The post இன்னுயிரை தியாகம் செய்த வீரர்களுக்கு போர் நினைவிடத்தில் ஜனாதிபதி மரியாதை appeared first on Dinakaran.

Related Stories: