சிறுதானிய உணவு விழிப்புணர்வு முகாம்

சென்னை: தேசிய சித்த மருத்துவ நிறுவனம் குணப்பாட துறை சார்பாக, சோமங்கலத்தில் உள்ள லிட்டில் டிராப்ஸ் முதியோர் இல்லத்தில் சிறுதானிய உணவுகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் இலவச மருத்துவ முகாம் நேற்று முன்தினம் நடந்தது. குணப்பாட துறை தலைவர் செந்தில்வேல் மற்றும் உதவி பேராசிரியை சுதா ரேவதி தலைமையில் வகித்தார். முகாமில் மருத்துவ பேராசிரியர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்கள் நானூறுக்கும் மேற்பட்ட முதியோர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு மருத்துவ ஆலோசனை, இலவச மருந்துகள் மற்றும் சிறுதானிய உணவுகளின் மருத்துவ பயன்கள், சிறுதானிய சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது. இதுபோன்ற மருத்துவ முகாம்கள் பல இடங்களில் நடத்தப்பட வேண்டும் என்று தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குனர் மீனாகுமாரி கூறினார். இந்த முகாம் ஆசாதி கா அமிரித் மகா உத்சவ் மற்றும் சர்வதேச சிறுதானிய ஆண்டிற்காக நடந்தது குறிப்பிடத்தக்கது.

The post சிறுதானிய உணவு விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: