வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகை சுதந்திர தினத்தை முன்னிட்டு

 

வேலூர், ஆக.14: சுதந்திர தினத்தை முன்னிட்டு வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் போலீஸ் அணிவகுப்பு ஒத்திகை நேற்று நடந்தது. நாட்டின் 76வது சுதந்திர தினம் நாளை (15ம் தேதி) நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தேசிய கொடியேற்றி வைத்து போலீசார் உட்பட சீருடை பணியாளர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கின்றனர். வேலூர் மாவட்டத்தில் வேலூர் கோட்டை கொத்தளத்தில் காலை 8 மணியளவில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தேசிய கொடியேற்றி வைத்து ேபாலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். முன்னதாக அவர் கோட்டையின் முகப்பில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கிறார்.

தொடர்ந்து வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் அவர் தேசிய கொடியேற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார். பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இந்நிகழ்ச்சிகளில் எஸ்பி மணிவண்ணன், டிஆர்ஓ ராமமூர்த்தி, ஆர்டிஓ கவிதா உட்பட அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொள்கின்றனர்.இந்த நிலையில் நேற்று காலை வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் அதற்கான ஒத்திகை நடந்தது. இதில் ஏடிஎஸ்பி பாஸ்கரன் தேசிய கொடியேற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். படவிளக்கம் சுதந்திர தினத்தை முன்னிட்டு வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் போலீஸ் அணிவகுப்பு ஒத்திகை நேற்று நடந்தது.

 

The post வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகை சுதந்திர தினத்தை முன்னிட்டு appeared first on Dinakaran.

Related Stories: