ஹாலிவுட் எழுத்தாளர்கள் 100 நாட்களுக்கு மேல் போராட்டம்: 63 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சினிமா தயாரிப்பு பாதிப்பு

கலிபோர்னியா: ஹாலிவுட் எழுத்தாளர்கள் 100 நாட்களை கடந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் கடந்த 63 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு படப்பிடிப்பு, வெப் தொடர் பணிகள் பாதித்து இருக்கின்றன. ஹாலிவுட் சினிமாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் தலைதூக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக ஆட்குறைப்பு, சம்பள பற்றாக்குறை போன்ற பிரச்சனைகளை எழுத்தாளர்கள் எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.

குறிப்பாக சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களுக்கு ஏ.ஐ. தொழில்நுட்ப உதவியுடன் கதை எழுதுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதால் திரைக்கதை, வசனம் எழுதுவோர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து ரைட்டர்ஸ் கில்ட் ஆஃப் அமெரிக்கா என்ற சினிமா எழுத்தாளர்கள் சங்கம் கடந்த மே மாதம் முதல் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இந்த போராட்டம் 100 நாட்களை கடந்தும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

ஹாலிவுட் எழுத்தாளர்களின் இந்த போராட்டத்துக்கு நடிகர், நடிகைகளும் தொடர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக கடந்த 63 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு படப்பிடிப்பு, வெப் தொடர் பணிகள் முடங்கியுள்ளன. எழுத்தாளர்களின் கோரிக்கை தொடர்பாக கடந்த வாரம் டிவி தொடர் தயாரிப்பாளர், ஸ்டூடியோ பிரதிநிதிகள் குழு, எழுத்தாளர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் போராட்டமானது தொடர்கிறது.

The post ஹாலிவுட் எழுத்தாளர்கள் 100 நாட்களுக்கு மேல் போராட்டம்: 63 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சினிமா தயாரிப்பு பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: