காஞ்சிபுரம் மாவட்டம் முசரவாக்கம் கோழிப்பண்ணையில் தீ விபத்து: 3000 கோழிக்குஞ்சுகள் தீயில் கருகின

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த முசரவாக்கம் கிராமத்திலுள்ள கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3000 கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி உயிரிழந்தன. முசரவாக்கம் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தனது விலை நிலத்தில் கோழி பண்ணை அமைத்து 3000 பிராய்லர் கோழிக்குஞ்சுகளை வளர்த்து வந்தார்.

இந்த பண்ணியில் அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டு பண்ணை முழுவதும் தீ பற்றி எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் நிகழ்விடம் வருவதற்குள் கோழிக்குஞ்சுகள் அனைத்தும் நெருப்பில் கருகின. மேலும் இந்த தீ விபத்து தொடர்பாக ராஜேந்திரன் கூறியதாவது, மின்வெட்டு ஏற்பட்டு உயர் மின்னழுத்தம் வந்த காரணத்தினால் பண்ணையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அதில் ஒரு சில தினங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த அனைத்து கோழிகளும் தீயில் எரிந்து இறந்ததாகவும், இந்த தீ விபத்தில் சுமார் 15 லட்ச ரூபாய் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்தனர் . இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post காஞ்சிபுரம் மாவட்டம் முசரவாக்கம் கோழிப்பண்ணையில் தீ விபத்து: 3000 கோழிக்குஞ்சுகள் தீயில் கருகின appeared first on Dinakaran.

Related Stories: