கரூரில் பி.டி.ஓ அலுவலக பொறியாளர் வீட்டில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவினர் சோதனை..!!

கரூர்: கரூரில் வட்டார வளர்ச்சி அலுவலக பொறியாளர் கார்த்திக் வீட்டில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவினர் சோதனை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர் நடராஜன் அளித்த புகாரை அடுத்து சோதனை நடைபெறுகிறது. கார்த்திக்கின் மனைவி கவிதா, தாயார் காளியம்மாள் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.49 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக புகார் எழுந்துள்ளது.

The post கரூரில் பி.டி.ஓ அலுவலக பொறியாளர் வீட்டில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவினர் சோதனை..!! appeared first on Dinakaran.

Related Stories: