கலைஞர் தன்னுடைய ஆசான் என்பதில் பெருமை… மேற்கத்திய உடைகளை அணிந்தாலும் நம் கலாச்சாரத்தை மறந்துவிட வேண்டாம்: நடிகை குஷ்பு பேட்டி

கோவை: தேசிய கைத்தறி நாளையொட்டி கோவை தனியார் கல்லூரியில் நடைபெற்ற அளஹார அணிவகுப்பில் நிகழ்ச்சியில் நடிகை குஷ்பு ஒய்யார நடை நடந்து பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில் மக்கள் சேவை மையம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவியாருக்கான கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பு நடைபெற்றது. இதில் நடிகை குஷ்பு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். மாணவ, மாணவியரை தொடர்ந்து நடிகை குஷ்பு-வும் ஒய்யாரமாக நடந்து பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை குஷ்பு; தன்னால் முடிந்த வரை கைத்தறி ஆடைகளை பயன்படுத்தி வருவதாக தெரிவித்தார். தேசிய கைத்தறி தினம் கொண்டாட தொடங்கிய பின் இளம் தலைமுறையினரிடையே கைத்தறி பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். மேற்கத்திய உடைகளை அணிந்தாலும் நம் கலாச்சாரத்தை மறந்துவிட வேண்டாம் என்று கோரிக்கை வைத்த குஷ்பு ஆடை சுதந்திரத்தை பொறுத்தவரை மனிதருக்கு இருக்கும் 6-வது அறிவை பயன்படுத்தி எல்லை தாண்டாமல் பார்த்துக்கொள்வது அவசியம் என்றார். கலைஞர் தன்னுடைய ஆசான் என்பதில் பெருமை கொள்வதாகவும் அவரை பற்றி இன்னொரு தளத்தில் பேசலாம் என்றும் குஷ்பு கூறினார். அதே நேரத்தில் மணிப்பூர் விவகாரம், அடுத்த சூப்பர் ஸ்டார் குறித்த கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க மறுத்து விட்டார்.

The post கலைஞர் தன்னுடைய ஆசான் என்பதில் பெருமை… மேற்கத்திய உடைகளை அணிந்தாலும் நம் கலாச்சாரத்தை மறந்துவிட வேண்டாம்: நடிகை குஷ்பு பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: