குனோ தேசிய பூங்காவில் இருந்து சிவிங்கி புலிகள் இடமாற்றமா?.. ஒன்றிய அமைச்சர் பூபேந்தர் பதில்

குவாலியர்: இந்தியாவில் அழிந்துவிட்ட சிவிங்கிப் புலிகளை மீண்டும் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டது. இதன்படி கடந்தாண்டு நமீபியாவிலிருந்து 8 சிவிங்கிப் புலிகள், சிறப்பு சரக்கு விமானம் மூலம் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டன. அவற்றை மத்தியப் பிரதேசம், குனோ தேசிய பூங்காவில் பிரதமர் மோடி திறந்துவிட்டார். பின்னர் கடந்த பிப்ரவரியில் தென்னாப்பிரிக்காவில் இருந்து மேலும் 12 சிவிங்கிப் புலிகள் கொண்டுவரப்பட்டன. குனோ தேசிய பூங்காவில் 20 சிவிங்கி புலிகள் விடப்பட்டன. இவ்வாறு கொண்டு வரப்பட்ட விலங்குகளில் 3 குட்டிகள் உள்பட 9 சிவிங்கிபுலிகள் இறந்துள்ளதால் அவை, குனோவில் இருந்து இடமாற்றம் செய்யப்படலாம் என செய்திகள் வந்தன.

ஒன்றிய வனத்துறை அமைச்சர் பூபேந்தரிடம் இதுபற்றி கேட்ட போது,‘‘ சிவிங்கி புலிகளை இடமாற்றம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை.பருவமழையின் போது காட்டில் பெருகிய பூச்சிகளினால் சிவிங்கி புலிகளுக்கு தொற்று ஏற்பட்டது. இந்த தொற்றினால் 2 குட்டிகள் இறந்துள்ளன. அங்கு உள்ள ஒவ்வொரு சிவிங்கி புலியும் காப்பாற்றப்பட வேண்டும். இந்த திட்டத்தை வெற்றிகரமான திட்டமாக செயல்படுத்த முயற்சி செய்து வருகிறோம்’’ என்றார்.

The post குனோ தேசிய பூங்காவில் இருந்து சிவிங்கி புலிகள் இடமாற்றமா?.. ஒன்றிய அமைச்சர் பூபேந்தர் பதில் appeared first on Dinakaran.

Related Stories: