மாமல்லபுரத்தில் தேசிய அளவிலான அலைசறுக்குப் போட்டி: 70 வீரர்கள் பங்கேற்பு

மாமல்லபுரம், ஆக 6: மாமல்லபுரத்தில் தேசிய அளவிலான அலைசறுக்குப் போட்டி நடைபெற்று வருகிறது. மாமல்லபுரம் கடற்கரை குப்பத்தில் ஆண்களுக்கான தேசிய அளவிலான அலை சறுக்குப் போட்டி நேற்று நடந்தது. இதில், மாமல்லபுரம், கோவளம், சென்னை, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மஹாராஸ்டிரா, கோவா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 16 வயதிற்கு கீழ் உள்ள வீரர்கள், 16 வயதுக்கு மேல் உள்ள வீரர்கள் என இரு பிரிவாக பிரிந்து பங்கேற்றனர். அப்போது, வீரர்கள் அலை சறுக்குப் பலகை மூலம் கடலில் சாகசம் நிகழ்த்தினர். இந்நிகழ்வு, பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதேப்போல் இன்று, பெண்களுக்கான அலைச்சறுக்கு போட்டி நடக்க உள்ளது. இதில், மொத்தம் 70 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இது குறித்து, அலை சறுக்குப் போட்டி நடத்தும் குழுவில் உள்ள ஒருவர் கூறுகையில், தேசிய அளவிலான அலை சறுக்குப் போட்டி நேற்று, இன்று என இரு நாட்கள் நடக்கிறது. இதில், ஆண் – பெண் என பலர் பங்கேற்கின்றனர். இதில், ஆண் மற்றும் பெண்கள் பிரிவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட உள்ளது. மேலும், அடுத்ததாக ஒரு அலை சறுக்குப்போட்டி நடக்க உள்ளது. இப்போட்டியில், புள்ளிப் பட்டியலில் முதல் 10 இடங்களை பிடிக்கும் வீரர், வீராங்கனைகள் வரும் 14ம் தேதி நடக்கும் சர்வதேச அலை சறுக்குப் போட்டியில் கலந்து கொள்வார்கள் என கூறினார்.

The post மாமல்லபுரத்தில் தேசிய அளவிலான அலைசறுக்குப் போட்டி: 70 வீரர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: