ஆடி வெள்ளியை முன்னிட்டு கூத்தாநல்லூர் கைலாச நாதர் கோயிலில் விளக்கு பூஜை

மன்னார்குடி, ஆக. 5: கூத்தாநல்லூர் சிவன்கோவில்தெரு சௌந்தரநாயகி சமேத கைலாச நாதர் கோயிலில்ஆடி வெள்ளியை முன்னிட்டு நடந்த திருவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் பங்கேற்று தீபமேற்றி வழிபட்டனர். ஆடி வெள்ளியில் பெண்கள் திருவிளக்கேற்றி வழிபடுவதால் குடும்பத்தை சுற்றி உள்ள தீமைகள் விலகி அனைவருக்கும் ஆரோக்கியம், செல்வம், ஞா னம் ஆகியவை கிடைக்கும். நல்ல கணவன் அமைவார்கள். தோஷங்கள் நிவ ர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும் என்றும் வாழ்வு வளமாகும்.

மேலும், குத்துவிளக்கு வழிபாடு என்பது சுற்றுப்புறத்தில் உள்ள இருளை அகற்று வதோடு நம் மனதின் இருளையும் அகற்றும் என்பது ஐதீகம். இந்நிலையில், கூத்தாநல்லூர் சிவன்கோவில் தெரு சௌந்தரநாயகி சமேத கைலாசநாதர் கோயிலில்ஆடி வெள்ளியை முன்னிட்டு திருவிளக்குபூஜை நேற்று நடைபெற்றது. பூஜையில் திரளாக பங்கேற்ற பெண்கள் சுவாமியின் படத்தினை வைத்து பூஜை செய்து மஞ்சள், குங்குமம், தேங்காய் வைத்து குத்து விளக்கேற்றி வேத மந்திரங்கள் முழங்க வழிபட்டனர்.

The post ஆடி வெள்ளியை முன்னிட்டு கூத்தாநல்லூர் கைலாச நாதர் கோயிலில் விளக்கு பூஜை appeared first on Dinakaran.

Related Stories: