அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம் ஒன்றியத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்: எம்எல்ஏ சுந்தர் வழங்கினார்

மதுராந்தகம்: மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியங்களில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை எம்எல்ஏ சுந்தர் வழங்கினார். செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் மொறப்பாக்கம் ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஒன்றிய குழு பெருந்தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் தம்பு, முன்னிலை வகித்தார். முன்னதாக பள்ளி உதவி தலைமை ஆசிரியர் புகழேந்தி வரவேற்றார்.

அதில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவுமான சுந்தர், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா சைக்கிளை வழங்கினர். பின்னர், அவர் பேசுகையில், அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பனிரெண்டாம் வகுப்பு முடித்து உயர்கல்வி செல்லும் பொழுது அவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு அரசு வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு நடந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600 க்கு 600 மதிப்பெண் பெற்று மாணவி ஒருவர் சாதனை படைத்துள்ளார். இதைப்போலவே மாணவர்களாகிய நீங்கள் மதிப்பின் பெற வேண்டும். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.

ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாம் அரசு பள்ளியில் படித்தவர் அப்படி நீங்கள் எல்லாம் வாழ்க்கையில் உயரவேண்டும், படித்து அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்’ என்றார். இதனைத்தொடர்ந்து வேடந்தாங்கல், எண்டத்தூர், எலப்பாக்கம், ஒரத்தி, தொழுப்பேடு, மதுராந்தகம் ஒன்றியம் வீராணகுன்னம் ஆகிய கிராமங்களில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் ஒன்றிய செயலாளர் சிவக்குமார், மாவட்ட கவுன்சிலர்கள் மாலதி, வசந்தா கோகுல கண்ணன், ராஜா ராமகிருஷ்ணன், உள்ளிட்ட ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம் ஒன்றியத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்: எம்எல்ஏ சுந்தர் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: