அரியானா கலவரத்தில் 200 பேர் கைது: மாநில உள்துறை அமைச்சர் தகவல்

சண்டிகர்: அரியானா கலவரம் தொடர்பாக 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் 102 எப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று உள்துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்தார். அரியானாவில், முஸ்லிம்கள் அதிகமாக உள்ள நூஹ் மாவட்டத்தில் கடந்த 31ம் தேதி விஷ்வ இந்து பரிஷத் ஊர்வலத்தில் கலவரம் வெடித்தது. இதில்,2 ஊர்காவல் படைவீரர்கள், இமாம் உட்பட 6 பேர் பலியாகினர். மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ் நேற்று நிருபர்களிடம் கூறுகையில்,‘‘ கலவரம் தொடர்பாக 202 பேர் கைதாகி உள்ளனர்.102 எப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன ’’ என்றார். நூஹ் கலவரத்தில் பலியான ஒருவரின் வீடு,ஒரு கடையை ஒரு கும்பல் நேற்று அடித்து நொறுக்கியது.

250 குடிசை இடிப்பு: நூஹ் மாவட்டத்தில் நடந்த கலவரத்தை தொடர்ந்து தவுரு நகரில் அரசு நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த 250 சட்ட விரோத குடிசைகளை மாநில அரசு அதிகாரிகள் நேற்று அகற்றினர். அந்த குடிசையில் வசித்தவர்கள் வங்க தேசத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. கலவரம் எதிரொலியாக தான் குடிசைகள் இடிக்கப்பட்டது என்று கூறப்படுவதை மாவட்ட கலெக்டர் பிரசாந்த் பவார் மறுத்துள்ளார். எஸ்பி மாற்றம்: இதற்கிடையே,நூஹ் மாவட்ட எஸ்பி வருண் சிங்க்லா மாற்றப்பட்டு நரேந்திர பிஜர்னியா புதிய எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். துணைக்கமிஷனர் பிரசாந்த் பன்வாரும் மாற்றப்பட்டுள்ளார். புதிய துணை கமிஷனராக ஐஏஎஸ் அதிகாரி திரேந்திரா கத்கதா நியமிக்கப்பட்டுள்ளார்.

The post அரியானா கலவரத்தில் 200 பேர் கைது: மாநில உள்துறை அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: