‘லிப்ட்’ கம்பி அறுந்து மூதாட்டி பலி: குடியிருப்பு உரிமையாளர் மீது வழக்கு

நொய்டா: நொய்டாவில் லிப்ட் கம்பி அறுந்து விழுந்து மூதாட்டி பலியான சம்பவத்தில் குடியிருப்பின் உரிமையாளர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.  உத்தரபிரதேச மாநிலம் நொய்டா செக்டார் பகுதியில் அமைந்திருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் ‘லிப்ட்’ வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நேற்றிரவு 70 வயது மூதாட்டி சுசீலா தேவி என்பவர் லிப்ட்டில் இருந்த போது, திடீரென லிப்ட்டின் கம்பி அறுந்து விழுந்தது. அதனால் மூதாட்டியின் தலையில் காயம் ஏற்பட்டது. மயக்க நிலையில் லிப்டில் கிடந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு பெலிக்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறந்தார். இச்சம்பவம் குறித்து போலீஸ் டிசிபி (மத்திய நொய்டா) அனில் குமார் யாதவ் கூறுகையில், ‘அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அந்த குடியிருப்பில் 28 தளங்கள் உள்ளன. விபத்தில் சிக்கிய மூதாட்டி 24வது மாடியில் இருந்து விழுந்து பெண் இறந்தார். எட்டாவது மாடி லிப்டில் சிக்கிய மூதாட்டி சுசீலா தேவியை மீட்க 45 நிமிடங்கள் தேவைப்பட்டது. விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார்.

The post ‘லிப்ட்’ கம்பி அறுந்து மூதாட்டி பலி: குடியிருப்பு உரிமையாளர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: