பறக்கை நெல்கொள்முதல் நிலையத்தில் கூடுதல் கட்டுமான பணி ஆய்வு

நாகர்கோவில், ஆக. 4: கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பறக்கை ஊராட்சிக்குட்பட்ட கால்நடை மருந்தக வளாகத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ₹12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நெல் கொள்முதல் நிலையத்தினை கலெக்டர் தர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் விவசாயிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் நெல் அறுவடை காலங்களில் சேமித்து வைப்பதற்கு கூடுதலாக கால்நடை மருந்தக வளாகத்தில் ஷெட் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

பறக்கை பற்று முதல் தாமரைக்குளம் வரை சுமார் 228 ஹெக்டேர் அளவில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் தற்போது அறுவடை செய்வதற்கு தயார் நிலையில் இருப்பதால் கால்நடை மருந்தக வளாகத்தில் கூடுதல் கட்டுமான பணிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து கலெக்டர் தர் வேளாண்மை துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆய்வில் வேளாண்மைத்துறை கூடுதல் இயக்குநர் (பொறுப்பு) ஆல்பர்ட் ராபின்சன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கீதா, அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் ராஜேஷ், பறக்கை ஊராட்சி தலைவர் கோசலை, விவசாய சங்க பிரதிநிதி பெரியநாடார், ராஜாக்கமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், விவசாய பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பறக்கை நெல்கொள்முதல் நிலையத்தில் கூடுதல் கட்டுமான பணி ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: