அதற்காக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய அவர்கள் திட்டமிட்டு வருவதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மேலும் ஆதாரங்களை பெற முயற்சிக்கிறோம். இதுகுறித்து இந்தியா கூட்டணியின் அடுத்த கூட்டத்தில் விவாதிக்கப்படும். பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மக்களிடையே மதிப்பை இழந்து விட்டது. 2024 மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெற்று, வகுப்புவாத பதற்றம், வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பாஜ ஆட்சியின் பேரழிவுகளில் இருந்து நாட்டை காப்பாற்றும்” இவ்வாறு கூறினார்.
* மம்தாவுக்கு பாஜ மறுப்பு
மம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டுகளை பாஜ மறுத்துள்ளது. இதுகுறித்து பாஜ மூத்த தலைவர் ராகுல் சின்ஹா கூறும்போது, ”மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை யார் ஹேக் செய்கிறார்கள் என்பதை மக்கள் பார்த்து கொண்டுள்ளனர். 2021ல் சட்டப்பேரவை தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றபோது இந்த குற்றச்சாட்டை சொல்லவில்லை. இதுபோன்ற புகார்களை சொல்வது அவர்களின் வாடிக்கை” என்றார்.
The post நாட்டை அழிவில் இருந்து ‘இந்தியா’ கூட்டணி காப்பாற்றும்: மம்தா பானர்ஜி உறுதி appeared first on Dinakaran.
