செல்லாகவுண்டம்பட்டி மாலுமுனி சாமி கோயிலில் ஆடி வழிபாடு

தோகைமலை, ஆக. 2: தோகைமலை அருகே பாதிரிப்பட்டி ஊராட்சி செல்லாகவுண்டம்பட்டியில் மாலுமுனி மற்றும் கன்னிமார் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு கிராம மக்கள் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் சிறப்பு பூஜை நடத்தி வழிபாடு செய்வது வழக்கம். இதேபோல் இந்த ஆண்டும் மாலுமுனிக்கு பூஜை செய்ய கிராம மக்கள் முடிவு செய்தனர்.

இதையடுத்து உலக அமைதி, மழை வேண்டுதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களுடன் நேற்று இரவு மாலுமுனிக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டனர். பின்னர் 50க்கும் மேற்பட்ட ஆட்டுக் கிடாக்களை வெட்டி சிறப்பு பூஜை செய்தனர். முன்னதாக கன்னிமார் அம்மனுக்கு இளநீர், மஞ்சள், குங்குமம், நெய், பழ வகைகள் உள்பட 16 வகையான சிறப்பு திரவியங்களால் பூஜை செய்து வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் சுற்றுவட்டாரத்தில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கன்னிமார் அம்மன், மாலுமுனியை வழிபட்டனர்.

The post செல்லாகவுண்டம்பட்டி மாலுமுனி சாமி கோயிலில் ஆடி வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: