திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், எலும்புக்கூடான நிலையில் உள்ள மின் கம்பத்தை அகற்றிவிட்டு புதிதாக மின் கம்பம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள் ளனர். திருக்கழுக்குன்றத்திலிருந்து மாமல்லபுரம் செல்லும் சாலையில் உள்ள கானகோயில்பேட்டை என்ற பகுதியில் சாலை ஓரத்தில் மின் கம்பம் உள்ளது. சிமென்ட் மின் கம்பம் மிகவும் பழமையானது. இதில், சிமென்ட் கலவை கொஞ்சம், கொஞ்சமாக பெயர்ந்து தற்போது முழுவதும் பெயர்ந்துள்ளது.
இதனால், கம்பத்தில் கம்பி மட்டுமே மீதம் இருக்கும் என்ற நிலை உள்ளது. பிரதான சாலை மற்றும் குடியிருப்புகள், கடைகள் உள்ள பகுதியில் இப்படி ஆபத்தை விளைவிக்கும் அல்லது எதிர்நோக்கி உள்ள இந்த கம்பம் பலத்தக்காற்று அடித்தால் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. மின் வாரிய அதிகாரிகள் தலையிட்டு மின் கம்பத்தை அகற்றிவிட்டு புதிய கம்பம் அமைக்க வேண்டும் என பொதுமக்களும், வியாபாரிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post திருக்கழுக்குன்றத்தில் எலும்புக்கூடான மின்கம்பம்: மாற்றி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.
