கூடுவாஞ்சேரியில் காவல் உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்டிய, சரித்திர பதிவேடு குற்றவாளிகளான 2 ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொலை!!

கூடுவாஞ்சேரி : சென்னை அடுத்த கூடுவாஞ்சேரியில் 2 ரவுடிகள் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டனர்.கூடுவாஞ்சேரி காவல் எல்லை காரணை புதுச்சேரி பகுதியில் ரவுடிகள் வினோத் என்ற சோட்டா வினோத், ரமேஷ் ஆகியோர் காரில் வந்துள்ளனர்.வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த காவல் உதவி ஆய்வாளரை ரவுடிகள் வினோத், ரமேஷ் ஆகியோர் கத்தியால் வெட்டியுள்ளனர்.ரவுடிகள் காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் வெட்டியதால், காவல் ஆய்வாளர் முருகேசன் இருவர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.காவல் ஆய்வாளர் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டதில் ரவுடிகள் வினோத், ரமேஷ் ஆகியோர் உயிரிழந்தனர்.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தாம்பரம் மாநகர காவல் கூடுவாஞ்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காரணை புதுச்சேரி அருங்கல் சாலையில் இன்று 01-08-2023 ஆம் தேதி அதிகாலை 03.30 மணியளவில் காவல் ஆய்வாளர் திரு. முருகேசன் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. சிவகுருநாதன் மற்றும் காவலர்கள் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த போது அதி வேகமாக வந்த கருப்பு நிற SKODA காரை நிறுத்த முற்பட்ட போது நிறுத்தாமல் உதவி ஆய்வாளரை இடிப்பது போல் வந்து போலிஸ் ஜீப் மீது மோதி நின்ற கார் அருகில் சென்ற போது அதில் இருந்து நான்கு நபர்கள் ஆயுதங்களுடன் காரை விட்டு இறங்கி போலிசாரை நோக்கி தாக்க முற்பட்டனர்.

அதில் ஒருவர் அருவாளால் உதவி ஆய்வாளரின் இடது கையில் வெட்டி மீண்டும் தலையில் வெட்ட முற்பட்ட போது உதவி ஆய்வாளர் கீழே குனிந்ததால் அவரது தொப்பியில் வெட்டுபட்டது. இதை பார்த்த காவல் ஆய்வாளர் ஒரு நபரையும் உதவி ஆய்வாளர் ஒரு நபரையும் சுட்டனர். மீதி இருவர் அங்கிருந்த ஆயுதங்களுடன் தப்பி ஓடினார்கள்.

மேற்படி காயம்பட்ட இருவரை பற்றி விசாரிக்க அதில் ஒருவர் பெயர் வினோத் (எ) சோட்டா வினோத். வயது 35, த/பெ. சுப்பிரமணி என்றும் அவர் ஓட்டேரி காவல் நிலைய சரித்திர பதிவேடு (A+ Category, HS.No.04/15) குற்றவாளி எனவும் அவர் மீது 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அதில் 10 கொலை, 15 கொலை முயற்சி, 10 கூட்டுக்கொள்ளை, 15 அடிதடி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் வழக்குகள் இருப்பதும் மற்றொரு நபர் பெயர் ரமேஸ், வயது 32, த/பெ. சுந்தரம் என்றும் அவர் ஓட்டேரி காவல் நிலைய சரித்திர பதிவேடு (A Category, HS.No.18/20) குற்றவாளி எனவும் அவர் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அதில் 5 கொலை, 7 கொலை முயற்சி, 8 அடிதடி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. மேற்படி காயம்பட்ட உதவி ஆய்வாளர் திரு. சிவகுருநாதன் என்பவர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார். காயம்பட்ட எதிரிகளை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த போது எதிரிகள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.,”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கூடுவாஞ்சேரியில் காவல் உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்டிய, சரித்திர பதிவேடு குற்றவாளிகளான 2 ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொலை!! appeared first on Dinakaran.

Related Stories: