கிழக்கு சீனாவில் ஃபியூஜியான் மாகாணத்தில் கரையை கடந்த டோக்சுரி புயல்: வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது

பெய்ஜிங்: கிழக்கு சீனாவில் ஃபியூஜியான் மாகாணத்தில் கரையை கடந்த டோக்சுரி புயல் அந்த மாநிலத்தையே புரட்டி போட்டுள்ளது. கடந்த வாரம் பிலிப்பைன்ஸை தாக்கி கடும் சேதங்களை ஏற்படுத்திய டோக்சுரி புயல், அடுத்ததாக சீனாவில் ஃபியூஜியான் மாகாணத்தை பதம் பார்த்துள்ளது. இந்த ஆண்டின் 5-வது புயலான டோக்சுரி குவான்சு நகரை கடந்த போது சூறாவளியுடன் அதிகனமழை கொட்டி தீர்த்தத்தால் வெள்ளத்திற்கு நடுவே வீடுகளுக்குள் சிக்கி கொண்டவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன.

சாண்டான் மாகாணத்தில் உள்ள ஜினான் நகரில் சாலையில் அதிவேகத்துடன் பெருக்கெடுத்து ஓடிய வெள்ள நீரில் சிக்கிய முதியவரை பேருந்து ஓட்டுநர் துணிச்சலுடன் காப்பாற்றினார். சான்சி மாகாணத்தின் அருகில் உள்ள கிராமம் ஒன்றில் வெள்ளநீர் வண்டல் மண்ணுடன் கலந்து சேறு நதியாக மாறி ஊருக்குள் புகுந்தது. அங்கு சிக்கி தவித்த 45 பேரை பத்திரமாக மீட்கப்பட்டனர்.

டோக்சுரி புயலால் சீனாவில் சுமார் 15 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3,63,000 பேருக்கு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். டோக்சுரி புயலால் இதுவரை 4,903 கோடி ரூபாய் அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், சுமார் 3,500 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சீன அரசு தெரிவித்துள்ளது.

The post கிழக்கு சீனாவில் ஃபியூஜியான் மாகாணத்தில் கரையை கடந்த டோக்சுரி புயல்: வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது appeared first on Dinakaran.

Related Stories: