நாமக்கல் ஜூலை 31: நாமக்கல் ஒன்றியத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்ப பதிவு முகாமினை, ராமலிங்கம் எம்எல்ஏ நேரில் ஆய்வு செய்தார்.நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 24ம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு முகாம்கள் நடந்து வருகிறது. நாமக்கல் ஒன்றியம் வள்ளிபுரம், தொட்டியப்பட்டி, ராசாம்பாளையம், கீழ் சாத்தம்பூர், கோனூர், கீரம்பூர், பெரியாகவுண்டம்பாளையம், திண்டமங்கலம், நரவலூர், தளிகை, அணியார், சிங்கிலிப்பட்டி, வகுரம்பட்டி, கொண்டம்பட்டி மேடு, சிவியாம்பாளையம், வீசாணம், மரூர்பட்டி, ஆவல்நாயக்கன்பட்டி, காதப்பள்ளி மற்றும் எர்ணாபுரம் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்று வரும் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்ப பதிவு முகாம்களை, நாமக்கல் ராமலிங்கம் எம்எல்ஏ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது, திட்டத்தின் நோக்கம் குறித்து மகளிருடன் எம்எல்ஏ கலந்துரையாடினார். ஆய்வின்போது மாவட்ட துணை செயலாளர் நலங்கிள்ளி, பொதுக்குழு உறுப்பினர் சுசீதரன், வட்டாட்சியர் சக்திவேல் மற்றும் திமுக சார்பு அணி நிர்வாகிகள், கிளை செயலாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
The post மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்ப பதிவு முகாம் appeared first on Dinakaran.
