விமான நிலையத்தில் லட்சுமணன், விக்னேஸ்வரியை வரவேற்று தனது வீட்டிற்கு அழைத்து சென்று குடும்பத்தினருக்கு அறிமுகம் செய்து வைத்தார். லட்சுமணன் குடும்பத்தினரும் இவர்கள் காதலை ஏற்று கொண்டனர். இதனை தொடர்ந்து, ஊர்பெரியவர்கள் முன்னிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு அதேபகுதியில் உள்ள சாய்பாபா கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். இதற்கிடையே, விக்னேஷ்வரியின் விசா ஆகஸ்ட் 6ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. எனவே அதற்குள் விக்னேஸ்வரி நாட்டை விட்டு வெளியேறுமாறு போலீசார் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். மேலும், வெளிநாட்டு இளம்பெண்ணின் திருமணத்தை இலங்கையில் உள்ள விக்னேஸ்வரியின் பெற்றோருக்கு தெரிவித்து சட்டப்பூர்வமாக பதிவு செய்யுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.
The post விமானத்தில் பறந்து வந்து ஆந்திர பேஸ்புக் காதலனை கரம்பிடித்த இலங்கை பெண்: விசா காலாவதியானதால் நாட்டை விட்டு வெளியேற போலீசார் நோட்டீஸ் appeared first on Dinakaran.
